ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற இடம் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி வரை எதுவித நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது மேன் முறையீட்டு நீதிமன்றம்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும், அது ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கான அடிப்படையாக அமைய முடியாது என ரஞ்சன் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை இன்று விசாரித்த நிலையிலேயே மேன்டுறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment