இலங்கையிலிருந்து சில .lk இணைய தளங்களைப் பார்வையிடும் போது தளங்களைத் திசை திருப்பி நாட்டில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை காட்சிப்படுத்திய ஹக்கிங் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர் பிரச்சினை, ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் அச்சுறுத்தல், பேச்சு சுதந்திரம் இல்லாமை, கட்டாய ஜனாஸா எரிப்பு உட்பட்ட விடயங்கள் பட்டியலிட்ட பக்கம் ஒன்றுக்கு அனைதது இணையங்களும் திசை திருப்பி விடப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அதனை சீர் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும், உள்நாட்டிலிருந்து பார்வையிடும் போது மாத்திரமே இவ்வாறு இடம்பெற்றதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment