முஸ்லிம்களுக்கு மட்டும் 'தனியார்' சட்டம் இல்லை: நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Friday, 12 February 2021

முஸ்லிம்களுக்கு மட்டும் 'தனியார்' சட்டம் இல்லை: நீதியமைச்சர்

 


இலங்கையில் அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் தனியார் சட்டங்கள் இருப்பதை மறைத்து தனியாக முஸ்லிம்களுக்கு மாத்திரம் இவ்வாறு விசேட சலுகைகள் இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என விளக்கமளித்துள்ளார் நீதியமைச்சர் அலிசப்ரி.


ஒரே நாடு ஒரே சட்டம் என்றால், முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமன்றி அனைத்து சட்டங்களையும் மாற்ற வேண்டும் எனவும் விவகார வயது விவகாரத்தில் ஏனைய சட்டங்களிலும் 18 வயதுக்குக் குறைவானோர் திருமண பந்தத்தில் ஈடுபட அனுமதியிருந்து வந்ததாகவும் சுட்டிக்காட்டிய நீதியமைச்சர், முஸ்லிம் சமூகம் காலத்துக்குத் தேவையான மாற்றம் குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் விளக்கமளித்திருந்தார்.


இதேவேளை, 18 வயதுக்குக் குறைவான கர்ப்பிணிப் பெண்களில் 80 வீதத்துக்கும் அதிகமானோர் ஏனைய சமயங்களைப் பின்பற்றுவோர் எனவும் அத்துராலியே ரதன தேரரின் கேள்விக்கு பதிலளிக்கையில் நீதியமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment