இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் மீது தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராக வட - கிழக்கு சிவில் சமூக ஏற்பாட்டில், அரசியல் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொத்துவிலில் ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி, இறுதி இலக்கான பொலிகண்டியை அடைந்துள்ளது.
நில ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, கட்டாய ஜனாஸா எரிப்பு மற்றும் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளையும் முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி, பல தடைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ள அதேவேளை இறுதி நிகழ்வில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி உட்பட்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment