ராஜபக்ச ஒருவர் சதி செய்கிறார்: ஞானசார - sonakar.com

Post Top Ad

Sunday, 28 February 2021

ராஜபக்ச ஒருவர் சதி செய்கிறார்: ஞானசார

 


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் தம்மையும் தமது அமைப்பையும் இறுதி அறிக்கையில் உள்வாங்கியமை ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது சதியென்கிறார் ஞானசார.


அளுத்கம வன்முறை, அதனைத் தூண்டியமை போன்ற விவகாரங்களூடாக அடிப்படைவாதம் மற்றும் இனப்பிளவினை உருவாக்குவதற்கு ஞானசார பங்களித்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமையானது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்நத ஒருவரது சதியென அவர் விளக்கமளித்துள்ளார்.


அதனை விடுத்து தம் போன்ற தேசிய இயக்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தேசிய நலனுடன்  நோக்க வேண்டும் என்று அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment