மைத்ரிக்கு நடப்பது கோட்டாவுக்கும் நடக்கும்: திலங்க - sonakar.com

Post Top Ad

Friday, 26 February 2021

மைத்ரிக்கு நடப்பது கோட்டாவுக்கும் நடக்கும்: திலங்க

 


சந்திரிக்கா மற்றும் மஹிந்தவின் பதவிக் காலங்களிலும் நாட்டில் குண்டுகள் வெடித்துள்ளன. ஆயினும், மைத்ரியின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற விடயத்துக்கு அவர் தண்டிக்கப்படுவாராயின், கேட்டாபே ராஜபக்சவும் அதனை எதிர்காலத்தில் எதிர்பார்க்க வேண்டும் என்கிறார் திலங்க சுமதிபால.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.


இந்நிலையில், மைத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அது கோட்டாபே ராஜபக்சவுக்கும் எதிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் தற்போதைய சூழ்நிலை குறித்து சுதந்திரக் கட்சி மத்திய குழு கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment