பதுளை மாநகர சபையின் பெரமுன கூட்டணி பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளதுடன் அதற்கான தீர்வொன்றை எட்ட முடியாதுள்ள நிலையில் மாநகர சபை நடவடிக்கைகளை முடக்கியுள்ளார் ஆளுனர் முசம்மில்.
தற்காலிகமாக, நிர்வாக சேவை அதிகாரி ஜீவந்த ஹேரத் விசேட ஆணையாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சி - பெரமுன கூட்டணியில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த போதிலும் அதிலொருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவியதன் பின்னணியில் கூட்டணி பெரும்பான்மையை இழந்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து வந்த சர்ச்சை சூழ்நிலையில் ஆளுநர் நகர சபை அதிகாரங்களை ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment