கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சபையில் தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது எனவும் அவர்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப் படும் எனவும் தெரிவித்துள்ளார் கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் எப்போது சுற்று நிருபம் வெளியாகும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் சுதர்ஷனி இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம், பிரதமரை விடவும் உயர்ந்த அந்த தொழிநுட்ப குழு யார்? ஏன் பிரதமரின் பேச்சை மீறி இவ்வாறு மீண்டும் பழைய நிலைக்குச் சென்று குழப்பங்களை உருவாக்குகிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment