ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக உருவாகியுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் இம்முறை முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐக்கிய இராச்சியம், கனடா உட்பட சில நாடுகள் இணைந்து பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளன.
இதற்கு பல நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அதனை எதிர் கொள்ள இலங்கை தயார் நிலையில் இருப்பதாக தினேஷ் விளக்கமளித்துள்ளதுடன் நாளை மறுதினம் 24ம் திகதி அவரது உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment