அரசியல் அனுபவமில்லாதவர் என்ற தவறான விளக்கத்துடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளை ஜனாதிபதி செயலகத்தோடு ஒரு சிலர் முடக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
அவ்வாறின்றி, ஜனாதிபதியானதும் அவரை பெரமுனவுக்கும் தலைவராக்கியிருக்க வேண்டும் எனவும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேண அனுமதித்திருக்க வேண்டும் எனவும் விமல் தெரிவிக்கிறார்.
யாருடைய தேவைக்காகவோ இவ்வாறு ஜனாதிபதி முடக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் கட்சி முக்கியஸ்தர்களுடனான தொடர்புகள் இல்லாத நிலையிலேயே ஜனாதிபதி தனி மனிதனாக செயற்பட்டு வருவதாகவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment