தேசிய கொடியிலுள்ள 'சிங்கம்' குறித்து மீளாய்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 February 2021

தேசிய கொடியிலுள்ள 'சிங்கம்' குறித்து மீளாய்வு

 


தேசிய கொடியில் உள்ள சிங்கத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை மீளாய்வு செய்யப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.


இம்முறை சுதந்திர நிகழ்வில் தற்போது வழக்கத்தில் உள்ள கொடியே உபயோகிக்கப்படவுள்ளதாகவும், சிங்கள மொழியில் மாத்திரமே தேசியக் கொடி இசைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தேசியக் கொடியில் மாற்றங்கள் கொண்டு வருவதாயின் அதனை அமைச்சரவை அங்கீகரித்து, பின் நாடாளுமன்றிலும் அதற்கான அனுமதி பெறப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment