இலங்கையில் பிறக்கும் குழந்தைகள் 18 வயது வரை ஒரே பாடத்திட்டத்திலேயே கல்வி கற்க வேண்டும் எனவும் யாருக்கும் தேவைப்படும் வகையில் தேவையான பாடங்களைக் கற்பிக்க இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.
இப்பின்னணியில் எதிர்வரும் நாட்களில் பெருமளவு மத்ரசாக்களைத் தமது உத்தரவின் பேரில் மூடவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை தனக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். அத்துடன் சமய குழுக்கள் பலவும் தடை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கடினமான விடயங்களை செய்வதற்காகவே ஜனாதிபதி தன்னை நியமித்துள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment