விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் என்னதான் கூப்பாடு போட்டாலும் பெரமுனவைத் தவிர வேறு எங்கும் அவர்களுக்கு இடமில்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
பெரமுன கட்சி விவகாரம் தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் அத்து மீறல் என அக்கட்சியினர் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விமல் வீரவன்ச தமது ஆதரவு குழுக்களைப் பயன்படுத்தி பெரமுனவை எச்சரித்து வரும் சூழ்நிலையில் பிரசன்ன இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment