ஜனாதிபதி செயலகத்தோடு முடக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இது விமலுக்கு அவசியமில்லாத விவகாரம் எனவும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பெரமுன சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தான் கூறிய கருத்தானது ஜனாதிபதிக்கு கட்சியில் உயர் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் மாத்திரமேயன்றி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரானதன்று என விமல் சமாளிக்க ஆரம்பித்துள்ளார்.
2015ல் மீண்டும் மஹிந்த அலையை உருவாக்கவும் அது போன்று கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதியாக்கவும் தான் முன்நின்று உழைத்தவன் எனவும் தனது நோக்கம் அதுவன்று எனவும் விளக்கமளித்து வருகிறார் விமல். இதேவேளை, விமலின் கட்சியில் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாகவும் பெரமுன தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment