தனக்கு கொரோனா தடுப்பூசி மீது எவ்வித நம்பிக்கையுமில்லை, அதனைப் பெற்றுக்கொள்ளப் போவதுமில்லையென தெரிவித்து வந்த ரதன தேரர், முதலாவது தினமே வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை ஏற்றிக் கொண்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ரதன தேரர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டது அதன் மீதான நம்பிக்கையிலன்று, மாறாக தனக்கு சீனா செல்ல வேண்டிய தேவையிருப்பதால் அதன் கட்டாயத்திலேயே இணங்கியதாக தன்நிலை விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, பௌத்த பிக்குகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment