தனியார் பேருந்து சேவை ஸ்டிரைக் தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 8 February 2021

தனியார் பேருந்து சேவை ஸ்டிரைக் தள்ளி வைப்பு

 


தனியார் பேருந்து சேவைகளினால் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவிருந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாதுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.


அரசின் உதவிகள் மற்றும் சலுகைகள் கிடைக்காததன் பின்னணியில் இவ்வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment