பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையின் போது இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.
எதிர்வரும் 22ம் திகதி இம்ரான் கானின் வருகை எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, கட்டாய ஜனாஸா எரிப்பு உட்பட சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர் நோக்கியுள்ள சவால்களை சமாளிக்க இம்ரானின் உதவி நாடப்படவுள்ளமை தெளிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை - இந்திய உறவுகள் பலப்படுவதை தடுப்பதற்கு சீன - பாகிஸ்தான் பிராந்திய அரசியல் நலனை முன் நிறுத்தி பாக். பிரதமர் முழு ஒத்துழைப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment