இம்ரான் - மஹிந்த பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 February 2021

இம்ரான் - மஹிந்த பேச்சுவார்த்தை

 


 எதிர்பார்த்தபடி இன்றைய தினம் இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


சீனாவின் உறவைப் பலப்படுத்தும் நிமித்தம் இலங்கையுடன் நட்புறவைக் கட்டியெழுப்பி வரும் பாகிஸ்தான், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தையும் கண்டு கொள்ளாது ராஜதந்திர உறவில் கவனம் செலுத்தியுள்ளது.


இந்நிலையில், இம்ரான் கானின் தலைமைத்துவத்தை வெகுவாக புகழ்ந்துள்ள பிரதமர் மஹிந்த, இரு நாட்டு கூட்டுறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமையும் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment