கொரோனா மற்றும் வேறு கஷ்டமான சூழ்நிலைகளின் பின்னணியில் நாடு திரும்ப முனையும் இலங்கை வெளிநாட்டு பணியகத்தில் பதிவுள்ள வெளிநாட்டில் வாழும் பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு இலவச விமானப் பயணச் சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலிருந்து பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கை மற்றும் இடவசதிகளை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு வெளிநாடுகளில் முடங்கிக் கிடப்போரை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா விளக்கமளித்துள்ளார்.
பதிவு செய்துள்ளவர்களையே அரச செலவில் மீள அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment