பேராதனை பல்கலையின் பொறியியல் பீட மாணவர்கள் மேலும் எண்மருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு மாணவன் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் 48 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதில் மேலும் எண்மருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இலங்கையில் 6637 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment