சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக குரல்கள் எழுப்பப் பட்டு வரும் நிலையில் இலங்கை முஸ்லிம்களும் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுவது தொடர்பிலும் பல நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆனாலும், இலங்கையரசு முஸ்லிம்களைக் கொண்டே உலகை சமாளிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.
உலக நாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கின்ற போது, அவ்வாறு எதுவும் நடக்கவில்லையெனும் பிரச்சாரத்தை மேற்கொள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளையே பயன்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற அதேவேளை அதில் பங்கேற்பவர்களை நினைத்தால் வெட்கித் தலை குனிய நேர்வதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment