விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் படங்களோடு tiktok சமூக வலைத்தளத்தில் தீவிரவாத கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த நபர் ஹற்றனின் வசித்து வந்ததாகவும் அண்மைக்காலமாக இவ்வாறு பல குறும் வீடியோக்களை வெளியிட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த நபரைத் தடுத்து வைத்துள்ளதாகவும் கைத்தொலைபேசியில் மேலும் பல வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment