ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை விசாரித்து வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதியப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வுப் பொறுப்பாளர் ஆகியோரையும் தமது கடமைகளை மீறியதன் பின்னணியில் இதில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசிலேயே முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் இப்பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment