தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையெனக் கூறி விசேட அதிரடிப்படையினரை மீளப் பெற்றுள்ள சரத் வீரசேகரவே தனக்கு ஏதும் நடந்தால் அதற்கான பொறுப்பாளியென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.
அண்மையில் வட-கிழக்கில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பொது மக்களுடன் கலந்து கொண்ட சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென தெரிவித்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றிருந்தது.
இதனை ஹிரு தொலைக்காட்சியிலும் சரத் வீரசேகர விளக்கியிருந்த நிலையில், தனக் எதுவும் நடந்தால் அதற்கு சரத் வீரசேகரவே பொறுப்பென சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment