சிறந்த ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் எதுவித உண்மையும் இல்லையென்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
கடந்த காலங்களில் அவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அனைத்து அரசுகளும் அதனூடான முழுப் பயனையடையாமல் மக்களின் எதிர்ப்பையே சந்தித்திருப்பதாகவும் நடைமுறை அரசுக்கும் அது பொருந்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தை முறையாகக் கையாளத் தெரியாத அரசுகள் மீண்டும் மக்கள் முன் நின்றாக வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment