2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக சஹ்ரானினால் நடாத்தப்பட்ட விரிவுரை வகுப்பில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 24 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டிடுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்திலும் இவ்வாறு ஏழு பெண்கள் கைதாகி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைதாகியுள்ள பெண்ணின் தந்தையும் சகோதரர்களும் ஏலவே இவ்விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment