மொட்டுக் கட்சிக்காக நாட்டை நாசமாக்க விட முடியாது என்கிறார் உதய கம்மன்பில.
விமல் - கம்மன்பில தரப்புக்கும் பெரமுனவின் வியத்மக மற்றும் அதன் ஆதரவு குழுவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் சூழ்நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் தமது பங்காளிகளுடன் விமல் வீரவன்ச தனது வீட்டில் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தார்.
இந்நிலையில், விமல் சார்பு பௌத்த பிக்குகளும் தற்போது பெரமுனவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும், 69 லட்சம் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிக்கமைவான அரசொன்றே முக்கியம் எனவும் மொட்டுக் கட்சிக்காக அக்கட்சியினரின் தேவைகளுக்காக நாட்டை நாசமாக்க விட முடியாது என்று கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment