சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் வட - கிழக்கு சிவில் சமூக மற்றும் அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மூன்று தினங்கள் திட்டமிடப்பட்டுள்ள தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட சில அரசியல்வாதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் சமூகமும் ஆதரவளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment