நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 772 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் 508 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 245, கம்பஹா 214 மற்றும் களுத்துறையிலிருந்து 49 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒக்டோபர் முதலான இரண்டாம் அலையில் மேல் மாகாணத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,947 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 5591 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment