தான் கொரோனாவைக் கண்டு அச்சப்படப் போவதில்லையெனவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் தெரிவித்து வந்த அத்துராலிய ரதன தேரர், நேற்றைய தினமே தனக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
உதய கம்மன்பிலவும் முந்திக் கொண்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் தேசிய விடுதலை முன்னணியின் முசம்மிலும் இணைந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தனக்குக் கொரோனாவைக் கண்டு எவ்வித அச்சமுமில்லையெனவும் அதற்கான தடுப்பூசியைப் பெறுவதற்கு முயற்சிக்கப் போவதில்லையெனவும் ரதன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment