முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியசுக்கு வெளிநாட்டுப் பிரயாணத் தடையுடன் பிணை வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், இலஞ்சமாக வீடொன்றைப் பெற்றதாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இவ்விருவுக்கு எதிராக குற்றபத்திரிகை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தலா 5 லட்ச ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment