அடுத்த வாரம் முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
மேல் மாகாணத்தில் இருந்து இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள் இவ்வாரம் நாட்டை வந்தடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரை சுகாதார ஊழியர்கள், முன்னிலைப் பணியாளர்கள் உட்பட 190,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment