இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் இம்ரான் கானுக்கு போதிய அளவு விளக்கமும் தெளிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, அவர் அது குறித்து பேசுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், சீனா - பாகிஸ்தான் கூட்டணியின் முக்கியத்துவத்தின் பின்னணியில் இலங்கை அரசு தற்போது எதிர்நோக்கியுள்ள மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கைக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கும் எனவும் இம்ரான் கான் ஊடாக ஏனைய முஸ்லிம் நாடுகளின் உதவிகளையும் பெறுவதற்கு முயற்சி இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இம்ரான் கான் எதிர்வரும் 22ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment