நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தை வளர விடப் போவதில்லையென தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரங்களின் சூத்திரதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் ஈஸ்டர் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று சம்பிரதாயபூர்வமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக பொத்துவில் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு நடவடிக்கையை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment