கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் பல்வேறு விளக்கங்களை அரசு முன் வைத்து வருகிறது.
இறுதியாக, நேற்றைய தினம் நிலத்தடி நீர் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் சாத்தியமில்லையென கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாறாயின் தற்போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென இன்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சபையில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், மிகச் சுருக்கமாக அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று மாத்திரம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment