இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பயணித்த வாகனம் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த நால்வர் சிறு காயங்களுக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த நிலையில் பல்லம பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இராஜாங்க அமைச்சர் வேறு வாகனத்தில் நிகழ்வுக்குச் சென்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment