2025 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் புதிய கூட்டணியொன்று ஊடாக போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுனவினரால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மைத்ரியை போட்டியிட வைப்பது குறித்து அவரது கட்சி மட்டத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அறியமுடிகிறது.
இரண்டாவது தடவை தான் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்திருந்த மைத்ரி, 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment