தனது பேச்சூடாக புத்த சாசனத்தைத் தான் அவமதிக்கவில்லையென விளக்கமளித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.
பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் தொடர்பிலான சட்டம் தனியார் சட்டங்களுள் ஒன்றென அவர் தெரிவித்திருந்த கருத்தினை எதிர்த்து பௌத்த துறவிகள் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தான் அவ்வாறு அவமதிப்பு எதையும் செய்யவில்லையெனவும் சமய ரீதியிலான தனியார் சட்டங்கள் குறித்து தனக்குத் தெரியுமா? என்று வினவப்பட்டதற்கே பதிலளித்ததாகவும் தனது பதிலை வேறு வகையில் எடுத்துக் கொள்ளாது ரதன தேரரின் கேள்வியோடு இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment