கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முயற்சிக்கு சமூக மட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வாறான முக்கிய விவகாரங்களை மக்கள் அபிப்பிராயத்தை அறிந்தே செய்ய வேண்டும் என அண்மையில் கார்டினல் மெல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்திருந்த ஞானசார, அபிப்பிராய வாக்கெடுப்பை நடாத்தச் சொல்வதற்க கார்டினல் எங்கள் மகாநாயக்கர் இல்லை, ஊடகங்கள் அவரது கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தேசிய விடயங்களில் கார்டினல் தனது 'எல்லையை' அறிந்து பேச வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், அப் பேச்சு அவரது தனிப்பட்ட அபிப்பிராயம் எனவும் அதற்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கும் தொடர்பில்லையெனவும் அபே ஜன பல கட்சி விளக்கமளித்துள்ளதோடு ஞானசாரவின் பேச்சைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment