இலங்கையர் என்ற அடிப்படையில் அனைத்தினங்களும் இலங்கையின் கலாச்சாரப் பண்புகளோடும் தமது சமயங்கள் சார்ந்த உப கலாச்சாரத்துடனும் வாழ்வதே யதார்த்தம் என தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
இந்நிலையில், ஏனைய இனங்களையும் பண்புகளையும் மதிப்பதோடு ஒருவரையொருவரும் நம்பும் பண்பும் வளர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து நீதியமைச்சர் பேசி வரும் அதேவேளை, இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பினால் சமூகங்கள் பாதிக்கப்படுவது குறித்து வெளிநாடுகள் அக்கறையுடன் கவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment