பிறேமலாலுக்கு வழங்கப்பட்ட நீதி ரஞ்சனுக்கும் வேண்டும்: சஜித் - sonakar.com

Post Top Ad

Saturday, 6 February 2021

பிறேமலாலுக்கு வழங்கப்பட்ட நீதி ரஞ்சனுக்கும் வேண்டும்: சஜித்

 


மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு பிறேமலால் ஜயசேகரவுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு போன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.


ரஞ்சனுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் இரு வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் அவருக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும என வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், 9ம் திகதியளவில் சபாநாயகரின் முடிவு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment