ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் திருப்திகரமாக இடம்பெறவில்லையென்ற சந்தேகம் இருப்பதாகவும் தேவையெனின் சர்வதேச நீதிமன்றை நாடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பிரதியைக் கேட்டுள்ள போதிலும் அது இதுவரை தரப்படவில்லையென தெரிவிக்கின்ற அவர், தமது சர்வதேச தொடர்புகள் ஊடாக மாற்று வழியை நாடுவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் நேரடி தொடர்புள்ள சாரா புலஸ்தினி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment