முஸ்லிம் தனியார் சட்டத்தை மீளாய்வு செய்து திருத்துவதற்கேற்ப பிரத்யேக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.
நாட்டில் தற்போதுள்ள பல்வேறு சட்ட விதிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் முஸ்லிம் தனியார் சட்டமும் உள்ளடக்கம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை முஸ்லிம் பெண்களுக்கான திருமண வயதினை 18 ஆக மாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment