முன்ளாள் ஆளுனரின் மகன் மீது தாக்குதல்; விசாரிக்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Friday, 26 February 2021

முன்ளாள் ஆளுனரின் மகன் மீது தாக்குதல்; விசாரிக்க உத்தரவு

 


முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்னவின் புதல்வன் மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர்.


பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை சந்திக்க வந்த நிலையில் சுமார் பத்து பொலிசார் இணைந்து சட்டக்கல்லூரி மாணவனான குறித்த நபரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment