2018ம் ஆண்டு ஒக்டோபரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்திருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்தினை முன்வைத்து, அக்காலப் பகுதியில் வெளியான காணொளி செய்தியொன்று மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், இச்செய்தியில் எதுவித உண்மையுமில்லையென மஹிந்த ராஜபக்ச தரப்பு மறுப்பு வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி வீடியோவில் 2018ம் ஆண்டுக்குரிய திகதி காணப்படுகின்ற போதிலும் நேற்று முதல் பெருமளவில் குறித்த வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment