யெமனில் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் யுத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆதரவை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார் புதிய அமெரிக்க ஜனாதிபதி பைடன்.
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அங்கு நடாத்தி வரும் யுத்தத்தினால் யெமனின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் இரு குழுக்களிடையே ஆரம்பித்த மோதலில் ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சவுதி அரேபியா எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், அமெரிக்கா - ஐக்கிய இராச்சியம் - பிரான்ஸ் உட்பட பல நாடுகள் சவுதியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்திருந்தன. ஆயினும், புதிய அமெரிக்க ஜனாதிபதி இதனை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளமையும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானிய ஆதரவில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment