சுதந்திர தின நிகழ்வில் பொது மக்களுக்கு அனுமதியில்லை - sonakar.com

Post Top Ad

Monday, 1 February 2021

சுதந்திர தின நிகழ்வில் பொது மக்களுக்கு அனுமதியில்லை

 


எதிர்வரும் நான்காம் திகதி இடம்பெறவுள்ள அரசின் உத்தியோகபூர்வ சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு அனுமதியில்லையென தெரிவித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர்.


ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன் அதற்கேற்க சுதந்திர சதுக்கம் பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


நாட்டின் அனைத்து மக்களையும் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு அரசாங்கம் தெரிவித்துள்ள அதேவேளை, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புகளும் இதனை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment