விமலுக்கு பிரச்சினையென்றால் களமிறங்குவோம்! - sonakar.com

Post Top Ad

Friday, 12 February 2021

விமலுக்கு பிரச்சினையென்றால் களமிறங்குவோம்!



விமல் வீரவன்சவுக்கு எதிராக பெரமுனவின் வியத்மக தரப்பினர் தொடர்ச்சியாக கருத்துரைத்து வரும் நிலையில் விமலுக்கு ஆதரவாக களமிறங்கப் போவதாக தெரிவிக்கிறார் மாகல்கந்தே சுதந்த தேரர்.


கோட்டாபே ராஜபக்சவுக்கு 69 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு விமல் வீரவன்ச கடுமையாக உழைத்திருந்ததாகவும் தெரிவிக்கும் அவர், அவ்வாறான ஒரு நபருக்கு எதிராக தற்போது இடம்பெற்று வரும் பிரச்சாரம் அதிருப்தியளிப்பதாக தெரிவிக்கிறார்.


அத்துடன், இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அதன் விளைவுகள் தெரியவரும் எனவும் அவர் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment