கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாமல் போன கோபத்திலேயே இந்திய பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் தமக்கு விருப்பமான அரசமைக்க முனைவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
இலங்கை மற்றும் நேபாளில் பி.ஜே.பியுடன் ஒத்துழைக்கக் கூடிய அரசுகளை உருவாக்கும் திட்டம் குறித்து அண்மையில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கருத்து வெளியிட்டிருந்தார். தற்சமயம் சீன ஆளுமைக்குட்பட்டுள்ள இலங்கையில் இவ்விடயம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்நிலையிலேயே இந்தியாவின் கோபம் குறித்து அமரவீர விளக்கமளித்துள்ள அதேவேளை, இறையான்மையுள்ள நாடுகளை வசப்படுத்தும் பி.ஜே.பியின் பேச்சு குறித்து இந்திய எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment