இந்திய கடும்போக்கு கட்சியான பாரதீய ஜனதா கட்சி, பிராந்தியத்தில் தமது ஆளுமையை அதிகரிக்கும் நிமித்தம் இலங்கை மற்றும் நேபாளிலும் தமக்கு ஆதரவான ஆட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னம்பிக்கையுள்ள தெற்காசியாவைக் கட்டியெழுப்பும் வகையில் பி.ஜே.பி திட்டமிட்டுள்ளதாகவும் பங்களதேஷ், பூட்டான் போன்ற நாடுகள் இந்தியாவின் இக்கொள்கையினால் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, இலங்கையிலும் தமக்கு ஆதரவாள அரசியல் சூழ்நிலையை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையில் ஏலவே சீனா தமது ஆளுமையை விரிவாக்கியுள்ளதுடன் பாகிஸ்தான் அதற்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றமையும் நடைமுறை அரசு தொடர்ந்தும் சீனாவிடம் கடன் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment